இ-பைக் தள்ளுபடித் திட்டம், வாஷிங்டன் மாநில சட்டமன்றத்தின் போக்குவரத்து நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதியளிக்கப்படுகிறது. இந்த நிதி, காலநிலை உறுதிப்பாட்டுச் சட்டத்திலிருந்து வருகிறது . சட்டமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி இத்திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்தும் பொறுப்பு, வாஷிங்டன் மாநிலப் போக்குவரத்துத் துறையின் செயல்மிகு போக்குவரத்துப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- நிதியில் அறுபது சதவீதம் $1200 தள்ளுபடிகளுக்கும், நாற்பது சதவீதம் $300 தள்ளுபடிகளுக்கும் ஒதுக்கப்படுகின்றன.
- தள்ளுபடியைப் பெறுவதற்கு முன்பு, மக்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, தேர்ந்தெடுக்கப்பட்டு, தகுதி ஆவணங்களை ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும்.
- தள்ளுபடிகளை, வாஷிங்டன் மாநிலத்தில் மின்சார பைக்குகளை விற்பனை மற்றும் சேவை செய்யும் அங்கீகரிக்கப்பட்ட பைக் கடையில் நேரில் சென்று பெற வேண்டும்.
- தகுதியான மின்சார பைக்கை வாங்குவதற்கு தள்ளுபடிகளைப் பயன்படுத்த வேண்டும்.
2023-2025-ஆம் ஆண்டில் ஒரு முன்னோட்டத் தள்ளுபடித் திட்டம் நிறுவப்பட்டது. 37,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்க உள்நுழைந்தனர், மேலும் 11,000-க்கும் மேற்பட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்களின் தகுதி ஆவணங்களைச் சமர்ப்பிக்க அழைக்கப்பட்டனர். இந்த முன்னோட்டத் திட்டம் மற்றும் அதன் முடிவுகள் குறித்து WSDOT ATD சட்டமன்ற அறிக்கை 2025- இல் நீங்கள் மேலும் படிக்கலாம்.
2025-2027-ல் நாங்கள் மீண்டும் தொடங்குவோம், மேலும் WE-bike 2027-ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் பிற்பகுதி வரை இயங்கும். தள்ளுபடிகள் வாங்குதல்களை 100% ஈடுசெய்ய வாய்ப்பில்லை.